×

முல்லை பெரியாறு பேபி அணை அருகே மரங்களை வெட்ட கேரளா திடீர் தடை

திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு பேபி அணையை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக அணை அருகே உள்ள 35 மரங்களை வெட்டுவதாக கேரள அரசிடம் தமிழக அரசு தெரிவித்து இருந்தது. ஆனால், அதற்கு கேரளா மறுப்பு தெரிவித்தது. பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் 15 மரங்களை வெட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில், 15 மரங்களை வெட்டுவதற்கு கேரள தலைமை வன அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். ஆனால், இது தொடர்பாக கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கோ, வனத்துறை அமைச்சர் சசீந்திரனுக்கோ எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என தெரிகிறது. இந்த விவரம் தற்போது கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கும், வனத்துறை அமைச்சருக்கும் தெரிய வந்தது. வனத்துறையின் இந்த நடவடிக்கைக்கு இருவரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், காங்கிரஸ், பாஜ உள்பட எதிர்கட்சியினரும் மரங்களை வெட்டுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், பேபி அணை அருகே மரம் வெட்டுவதற்கு கேரள வனத்துறை அளித்த அனுமதியை ரத்து செய்து, முதல்வர் பினராய் விஜயன் நேற்று உத்தரவிட்டுள்ளார். இதனால், தமிழக அரசால் அங்கு மரங்களை வெட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது….

The post முல்லை பெரியாறு பேபி அணை அருகே மரங்களை வெட்ட கேரளா திடீர் தடை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Mulla Periyaru Baby Dam ,Thiruvananthapuram ,Mullu ,Periyaru ,Baby Dam ,
× RELATED பெண்ணின் பலாத்கார வீடியோவை...